Search This Blog

Friday, 22 April 2016

தெரிவுவிடைக் கருத்தறிதல்


தெரிவுவிடைக் கருத்தறிதல்


பின்வரும் கதையைக் கவனமாகப் படி.



ஒரு காட்டில் வரிக்குதிரை கூட்டம் வாழ்ந்தது. அக்கூட்டத்தில் ஒரு தாயும் குட்டியும் இருந்தன. அந்த வரிக்குதிரைக்குட்டி மற்றக் குட்டிகளோடு சேராது. அது இலை தழைகளைத் தின்றுவிட்டு எப்போதும் படுத்துத் தூங்கும். அதனால், அது நன்கு பருத்துக் கொழுத்திருந்தது.

ஒருநாள் அந்த வரிக்குதிரை தனியாக மேயச் சென்றது. நன்றாக மேய்ந்த பிறகு அது அங்கேயே படுத்துக்கொண்டது. அப்போது ஒரு சிங்கம் வந்தது. அச்சிங்கம் குட்டியைப் பிடித்துத் தின்ன அருகில் சென்றது. குட்டியால் எழுந்து ஓட முடியவில்லை. நல்ல வேளை ! அந்த வரிக்குதிரையின் தாய் அங்கே வந்தது. அது சிங்கத்தைக் கால்களால் உதைத்துத் தன் குட்டியைக் காப்பாற்றியது. தாய் தன் குட்டியைப் பார்த்து , “ நீ சோம்பேறியாக இருக்கக்காமல் ஓடியாடி விளையாட வேண்டும். அப்போதுதான் உன்னால் வேகமாக ஓட முடியும் , ”   என்று அறிவுரை கூறியது.


கேள்விகளுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அடைப்பினுள் எழுது.


1.  வரிக்குதிரைகள் எவ்வாறு வாழ்ந்து வந்தன ?


1.
மகிழ்ச்சியாக

2.
செழிப்பாக

3
கூட்டமாக

4
ஒற்றுமையாக
  (      )




2. வரிக்குதிரைக்குட்டி எதை இரையாகத் தின்றது


1.
இலைகளை

2.
தழைகளை

3
செடிகளை

4
இலை தழைகளை
  (      )


3. வரிக்குதிரைக்குட்டி ஏன் எழுந்து ஓட முயன்றது?



1.
மற்றக் குதிரைகளைக் கண்டதால்

2.
தன் தாயைக் கண்டதால்

3
நரியைக் கண்டதால்

4
சிங்கத்தைக் கண்டதால்
  (      )


4.  தாய்  வரிக்குதிரைச் சிங்கத்தை என்ன செய்தது?



1.
தன் கைகளால் உதைத்தது

2.
கால்களால் உதைத்தது

3
வேகமாகத் துரத்தியது

4
பல்லால் கடித்தது
  (      )


5.  தாய் தன் குட்டியிடம் என்ன கூறியது?

1.
ஓடியாடி விளையாடாதே என்றது

2.
சிங்கத்தைக் கண்டால் ஓடு என்றது

3
சோம்பேறியாக இருக்கக்கூடாது என்றது

4
தினமும் ஓட வேண்டும் என்றது
  (      )




சொற்பொருள்

கீழ்காணும் சொற்கள் கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றவை. அவற்றில் பொருளை உணர்த்தும் சரியான சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்புக்குறிக்கள் எழுது.



6.
தின்றுவிட்டு
(1)
ருசித்துவிட்டு



(2)
உண்டுவிட்டு



(3)
மென்றுவிட்டு



(4)
கடித்துவிட்டு
   (    



7.
பருத்து
(1)
தடித்து



(2)
மெலிந்து



(3)
வளர்ந்து



(4)
உருண்டு
   (     )



8.
அருகில்
(1)
தொலைவில்



(2)
அடியில்



(3)
தூரத்தில்



(4)
பக்கத்தில்
   (     )



9.
பார்த்து
(1)
கவனித்து



(2)
யோசித்து    



(3)
நோக்கி



(4)
கூர்ந்து
   (     )



10.
அறிவுரை
(1)
புத்திமதி



(2)
ஆலோசனை   



(3)
திட்டம்



(4)
பரிந்துரை
   (     )







No comments:

Post a Comment